அண்ணாத்த படத்தில் ரஜினியின் வில்லன் இவர்தான்..!

 
அண்ணாத்த படத்தில் ரஜினியின் வில்லன் இவர்தான்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாவும் மகளாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில் குஷ்பு, நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், சூரி, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால், திரைத்துறை மீண்டும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அண்ணாத்த உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அண்ணாத்த படத்தில் வில்லனாக அர்ஜய் என்பவர் நடிக்கும் விபரங்கள் தெரியவந்துள்ளன. இவர் ஏற்கனவே தெறி, சுல்தான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web