இது சூப்பர் நியூஸ்..! பிரபாஸ் உடன் இணையும் துல்கர் சல்மான்? 

 
1

ஆதி புருஷ் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’. ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும்  இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான இதை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோவில், படத்தின் நாயகி தீபிகா படுகோன், முக்கிய கதாப்பாத்திரமாக வரும் அமிதாப் பச்சன் ஆகியோர் அடங்கிய கூட்டம் யாரோ ஒரு கூட்டத்தினரிடம் மாட்டிக்கொண்டது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்களை காப்பாற்ற வரும் விஞ்ஞானியாக வருகிறார், பிரபாஸ்.

Kalki

இந்த வீடியோவின் இறுதியில் ஒருவர், “What is Project K..?” என்று கேட்க, அதற்கு பதில், Kalki (கல்கி) என்ற விஷ்ணுவின் கடைசி அவதாரம் பதிலாக திரையில் தோன்றுகிறது. கலியுகத்தின் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படும் கல்கி, 2898ஆம் வருடத்தில், கலி முத்திப்போகும் போது அவதாரம் எடுப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, Kalki 2898 AD என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dulquer Salman

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படம், எண்ணிலடங்கா கிராஃபிக்ஸ் காட்சிகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பட வேலைகள் முடியும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. படம், அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி மாதத்தில் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web