அரசியலுக்கு வருவீங்களா என்கிற கேள்விக்கு அஜித் கூறிய பதில் இதுதான்..!

 
அஜித் குமார்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய திட்டம் ஏதேனும் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் அஜித் தெரிவித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேரடி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கிக் கொண்டார் ரஜினிகாந்த். ஆனால் எதிர்பாராதவிதமாக கமல்ஹாசன் கட்சியை துவங்கிய பல்வேறு கட்ட தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுயேட்ச்சைகளாக போட்டியிட்டு 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி பலருடைய மனதில் எழுதுள்ளது. இதுதொடர்பாக பலரிடையே சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றனர்.

இதற்கிடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித்திடம் அஜித், அரசியலுக்கு வருவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில் வைரலாகி வருகிறது. அந்த கேள்வி குறித்து கருத்து தெரிவித்து அஜித், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டுமே போதும், நாடு நன்றாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளார்.

From Around the web