விஜய் டிவியில் இருந்து வனிதா வெளியேற்றம்- ரம்யா கிருஷ்ணன் கூறிய பதில் இதுதான்..!
 

 
வனிதா விஜயகுமார், ரம்யா கிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேறியதை பற்றி ரம்யா கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருப்பது விஜய் டிவி. இதுவரை பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் ஜோடிகள் என்கிற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் மற்றும் நான்காவது சீசனில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் ஜோடிகளாக களமிறங்கினர். இதுவரை மூன்று சுற்றுகளில் இந்த ஜோடி பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புதிய எபிசோட் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது சீனியர் நடிகை ஒருவரால் அவமதிக்கப்பட்டதாக கூறி பெயர் கூற விரும்பால் நடிகை வனிதா இரண்டு பக்கத்துக்கு அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இது தொலைக்காட்சி துறை பரபரப்பானது. தற்போது அவர் பெயர் குறிப்பிடாமல் இருந்த நபர் ரம்யா கிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட எபிசோட் படமாக்கப்பட்ட போது வனிதாவின் நடனத்துக்கு வெறும் ஒரு மதிப்பெண் தான் ரம்யா கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இதுதொடர்பாக மனம் திறந்த நடிகை ரம்யா, பிக்பாஸ் ஜோடியில் வனிதாவுக்கு என்ன அவமதிப்பு நடந்தது என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது என்பது தான் என்னுடைய கருத்து. எனினும், இதுதொடர்பாக நான் கருத்து சொல்ல வேண்டுமானால் நோ கமெண்ட்ஸ் என்பது தன என்னுடைய பதில் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

From Around the web