பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்..!

 
பிக்பாஸ் நமீதா மாரிமுத்து

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவசரகதியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதன் உண்மையான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து தற்போதைய சீசனில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே அவர் நன்றாக விளையாட துவங்கினார். பட்ஜெட் டாஸ்க்கில் நமீதா தனது பின்னணி குறித்து பேசியது போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கிய ஒரே வாரத்தில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பான அறிவிப்பு கடந்த சனிக்கிழமை தொகுப்பாளர் கமல்ஹாசன் நிகழ்ச்சி அரங்குக்கு வந்த போது சொல்லப்பட்டது. இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வரம்பை மீறி நமீதா நடந்து கொண்டதாகவும், அதனால் தான் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதாக தகவல்கள் வெளியாகின. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்ட நமீதாவும் இதுவரை ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவில்லை.

இந்நிலையில் நமீதா வெளியேறியதற்கான உண்மையான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு சில உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவர் வெளியேறிவிட்டதாகவும் நமீதாவின் தோழி சில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக நமீதா பிக்பாஸில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்திக்கும் அந்த தோழி மறுப்பு தெரிவித்துள்ளார்.

From Around the web