அந்தப் பாடகியோட இதுதான் டீல்..! ஜெயம் ரவி போட்டுடைத்த உண்மை

 
1

ஜெயம் ரவியின்  மனைவியும் சேனல்களுக்கு வழங்கிய பேட்டிகளில் ஜெயம் ரவி பற்றி மிக உயர்வாகவே பேசி இருப்பார்.

ஆனால் இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது பொய்யாக இருக்கக் கூடாதா என்று பிரபலங்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்த்தி தன்னிடம் ஜெயம் ரவி முடிவு கேட்டாமல் தன்னிச்சையாகவே விவாகரத்து முடிவை வெளியிட்டு எனக்கும் எனது குடும்பத்திற்கும் மனக்கஷ்டத்தை கொடுத்துள்ளார் என்று தனது பக்கத்தில் உள்ள நியாயத்தை தெரிவித்து இருந்தார். இதனால் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

இருந்தபோதிலும் ஜெயம் ரவிக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது ஆர்த்தியின் அம்மா தான். ஆர்த்திக்கும் ஜெயம் ரவி மீது சந்தேகங்கள் உள்ளன என்று பல காரணங்கள் இவர்களது விவாகரத்துக்கு அடுக்கப்பட்டு சென்றது. அதிலும் முக்கியமாக பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவி தொடர்பில் உள்ளார் என பேசப்பட்டது.

இந்த நிலையில் விவாகரத்து சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ள ஜெயம் ரவி, கடினமாக உழைத்து தான் இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்த பெயரையும் புகழையும் டேமேஜ் செய்ய நினைக்கின்றார்கள். அவ்வளவு எளிதில் அதை நான் நடக்க விட மாட்டேன். என்னுடைய வக்கீல் மூலம் ஆர்த்தியின் தந்தையிடம் பேசிய பிறகு தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு முன்னரே ஆர்த்தியின் பெற்றோரும் என்னுடைய பெற்றோரும் கலந்து பேசினார்கள். அப்படி இருக்கும் போது எனக்கு எதுவுமே தெரியாது என்று ஆர்த்தி ஏன் சொல்கின்றார் என்று தெரியவில்லை.

ஜூன் மாதம் என்னுடைய மகனின் பிறந்த நாள் அப்போது சென்னையில் தான் இருந்தேன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகின. என்னுடைய காரைப் பார்த்ததாக சொல்கின்றார்கள். நான் எனது காரை எங்கு வேண்டுமானாலும்  எடுத்து செல்வேன். அதற்காகத்தானே நான் கார் வாங்கினேன். என்னுடைய சொந்த உழைப்பில் நான் வாங்கிய கார் அதை எங்கும் எடுத்துச் செல்ல எனக்கு உரிமை உண்டு.

விவாகரத்து பற்றி என்னுடைய மூத்த மகனிடம் மட்டுமே கூறினேன். இளைய மகன் மிகவும் சின்னப் பையன் என்பதால் அவனிடம் பேசவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் சொன்னால். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை என சொன்னேன்.

மேலும் அந்தப் பாடகியை எனக்கு தெரியும். அவர் பாடகி மட்டுமல்ல ஒரு சைகாலஜிஸ்டும் கூட. நிறைய பேரை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார். அவருடன் ஒரு ஆன்மீக மையத்தை திறக்க திட்டமிட்டேன். அது பிடிக்காமல் இப்படி பேசுகின்றார்களா என தெரியவில்லை. என்னிடம் அனைத்து ஆதாரமும் உண்டு நீதிமன்றத்தில் நிரூபிக்க தயார். சட்டத்தின் மூலம் உண்மை வெளியே வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

From Around the web