பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்தது இவர்தான்- இயக்குநர் தகவல்..!

 
சாய் பல்லவி

மலையாளத்தில் வெளியாகி தேசியளவில் வரவேற்புகளை குவித்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவலை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் உலகளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அதுவரை வெறும் கேரளாவில் மட்டும் அறியப்பட்டு வந்த நடிகர் நிவின் பாலியை தென்னிந்தியளவில் அந்த படம் பிரபலமாக்கியது.

மேலும் அந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி ஒரே இரவில் உச்சநட்சத்திரமாக மாறினார். படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனுக்கும் வாழ்க்கையின் பாதையே மாறியது. பிரேமம் படம் பல புதுமுகங்களுக்கு புது வெளிச்சத்தை பாய்ச்சியது.

அண்மையில் சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களை சந்தித்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பிரேமம் படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகையை குறித்த தகவலை வெளியிட்டார்.

அதன்படி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் அசினை நடிக்க வைக்க அல்போன்ஸ் புத்திரன் எண்ணியுள்ளார். ஆனால் அசினை அப்போது தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போது சாய்பல்லவி குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணாக மாற்றி எழுதினேன். பிறகு சாய்பல்லவியும் படத்தில் நடிக்க சம்மதித்தார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு தான் என்று அல்போன்ஸ் புத்திரன் அந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web