பிக்பாஸ் சீசன் 5 முதல் போட்டியாளர் இவர்தான் - முழு விபரம்..!
 

 
இசைவானி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கானா பாடல்கள் மூலம் உலகளவில் பிரபலமான பாடகி இசைவானி முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று முதல் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் விக்ரம் பட பின்னணி இசையுடன் கமல்ஹாசன் அறிமுகமானார். 

அதை தொடர்ந்து புதிய சீசனுக்காக கட்டப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார். முந்தைய சீசனைக் காட்டிலும், புதிய சீசனுக்கான பிக்பாஸ் வீடு மிகவும் வித்தியாசமாக அமைக்கபப்ட்டு இருந்தது.

அதை தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு வந்த கமல்ஹாசன், முதல் போட்டியாளரை அறிமுகம் செய்தார். அதன்படி கானா பாடகி இசைவானி நிகழ்ச்சியில் பாடலுடன் அறிமுகமானார். அவருடைய நிகழ்வு முடிந்ததும் கமல்ஹாசனுடன் உரையாடினார்.


அப்போது அவர் தந்தையின் மூலம் கானா பாடல் உலகுக்கு அறிமுகமானேன். சில திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளேன். 2020-ம் ஆண்டு பிபிசி-யின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்கிற விபரங்களை அவர் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அவர், புதிய சீசனுக்காக வடிவமைக்கப்பட்ட வீட்டை பார்த்து அதிசியம் அடைந்தார். சமூகவலைதளங்களில் இசைவானி வெற்றி அடைய பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

From Around the web