இதுதான் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கா..? கையில் வாளுடன் மிரட்டும் சூர்யா..!

 
இதுதான் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கா..? கையில் வாளுடன் மிரட்டும் சூர்யா..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜன் நடித்து வரும் ‘சூர்யா 40’ படத்தில் சூர்யா பங்கேற்று நடித்து வரும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் ‘சூர்யா 40’. இதில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டி. இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

பக்கா கிராமத்து லுக்கில் வேட்டி கட்டி, கையில் வாளுடன் திரும்பி நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார் சூர்யா. அவருடைய முழு உருவம் தாங்கிய புகைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web