பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவே முதல் முறை…என்னனு தெரியுமா..வைரலாகும் தகவல்!

மேலும் இந்த முறை போட்டியாளர்களாக கூல் சுரேஷ்,ஜோவிகா,விஜய் வர்மா, நிக்ஸன்,அனன்யா ராவ், பவா செல்லதுரை, விசித்ரா, யுகேந்திரன்,விஷ்ணு, சரவணன் விக்ரம், அக்ஷயா, பூர்ணிமா, மாயா, பிரதீப் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர் அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு பரிச்சியம் தான்.
முதல் வாரத்திலேயே அதிரடி பிரச்சனைகளால் பிக் பாஸ் வீட்டை ரணகளமாக்கினர் போட்டியாளர்கள்…அதே நேரம் ஐஷு,மணி, ரவீனா, வினுஷா போன்ற போட்டியாளர்கள் எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது போல் தான் இருக்கின்றது.
முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்குள் நாமினேஷன் நடத்தப்பட்டு அனன்யா ராவ் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார்…இதைத்தொடர்ந்து பவா செல்லதுரை உடல் நல குறைவால் விடைபெற்றார்..விஷ்ணு, விசித்ரா, பூர்ணிமா, பிரதீப், மாயா, ஜோவிகா, அக்ஷயா, ஆகிய ஏழு பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலில் பவா செல்லதுரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேறியதால் இந்த வாரம் எவிக்சன் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது…இந்த தகவல் மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது…பரவாயில்லையே என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்…ஆனால் எதாவது உள் குத்து இருக்குமோ எனவும் பேசப்பட்டு வருகிறது..
இந்த வாரம் Elimination கிடையாதாம் பா.. 😀 #BiggBossTamilSeason7 pic.twitter.com/n1wlgPDeHB
— Vijay Television (@vijaytelevision) October 11, 2023
.