பிக்பாஸ் சீசன் 5-யில் அதிக சம்பளம் இவருக்கு தான்..!

 
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள்

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் குறித்து தெரியவந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அபிஷேக் வெளியேறிய பிறகு வீடு சரியாகிவிடும் என்று பார்த்தால், தொடர்ந்து அதே நிலைமை தான் நீடிக்கிறது.

விறுவிறுப்பு இல்லாமல் செல்வதாக மக்கள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். அதே சமயத்தில் இந்த வார எலிமினேஷனை எதிர்நோக்கி பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதன்படி வரும் ஞாயிறன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் பாடகி சின்ன பொன்னு அல்லது நடிகர் அபிநயர் என இருவரில் ஒருவர் எலிமினேட்டாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிகமாக சம்பளம் வாங்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் முன்னணி ஆங்கராக இருக்கும் ப்ரியங்காவுக்கே வாரத்துக்கு ரூ. 2.75 லட்சம் தான் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

ஆனால் சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ள அபிநய்க்கு வாரத்திற்கு ரூ. 2.75 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் அதிகம் ஊதியம் வாங்கும் பிரபலம் அபிநய் என்கிற விவரம் தெரியவந்துள்ளது.

From Around the web