நடுக்கடலில் திரௌபதி நடிகைக்கு திருமணம்- கணவர் இவர்தான்..!

 
நடுக்கடலில் திரௌபதி நடிகைக்கு திருமணம்- கணவர் இவர்தான்..!

டூலெட், திரௌபதி, மண்டேலோ போன்ற படங்களில் நடித்துள்ள ஷீலா நடுக்கடலுக்குள் படகில் இருந்தவாறு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘திரௌபதி’ படம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் ஷீலா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர், டூலெட் படம் மூலம் சினிமாவுக்கு வந்தார்.

கடந்த வாரம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான ‘மண்டேலா’ படத்தில் ஷீலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடிகர் ஷீலா மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சினிமாவில் வருவதற்கான முயற்சியில் இருந்த போது நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான தம்பி சோழரை கடந்த 2014-ம் ஆண்டு ஷீலா திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருவது தெரியவந்துள்ளது.

From Around the web