கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தில் வந்த குட்டி பொண்ணா இது..! 

 
1
சிவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிறுத்தை. இந்த படத்தை கார்த்தி, தமன்னா, சந்தானம், பேபி ரக்ஷனா, அவினாஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் தெலுங்கு மொழியில் வெளிவந்த விக்ரமர்குடு படம் படத்தின் தழுவல். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி ரக்ஷனா திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் வாயை பிளந்து உள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நடித்து வந்த நட்சத்திரமாக அவர்கள் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். இவர் சிறுத்தை படத்திற்குப் பிறகு ஓகே கண்மணி, பாண்டிய நாடு ,கடல் , த்ரிஷா இல்லனா நயன்தாரா , நிமிர்ந்து நில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பேபி ரக்ஷனா கூறுகையில் “நான் என்னுடைய மூன்றரை வயதில் இருந்து நடிக்கிறேன், இடையில் சில காலம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் சில சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தேன். தற்போது நான் 11ஆம் வகுப்பு முடிந்து 12ஆம் வகுப்பு செல்ல இருக்கிறேன் என்றார்.

மேலும் சிறுத்தை படத்தில் வாய்ப்பு கிடைத்தற்கு காரணம், அந்த படத்திற்கு முன்னர் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தேன் அதனை பார்த்து இயக்குனர் சிவா ஆடிஷன் நடத்தினர். அதற்கு இயக்குனர் அதில் கலந்துகொண்டு தேர்வாகி பின்னர் தான் சிறுத்தை படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு மூன்றரை வயது தான் ஆனாது.

From Around the web