ராயன்ல இதுதான் மைனஸ்..! செய்யாறு பாலா விமர்சனம்..!
இந்த நிலையில், ராயன் படத்தின் முதல் நாள் காட்சியை பார்த்த செய்யாறு பாலா படம் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ராயன் படத்தின் கதையை கேட்கும் போது நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் படமாக பார்க்கும் போது தனுஷ் எதையோ கோட்டை விட்டுட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த படத்தில் பருத்திவீரன் சரவணன், எஸ்ஜே சூர்யா ஆகிய இரண்டு பெரிய வில்லன்கள். இந்த இரண்டு கேங்ஸ்டாரையும் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இந்த இரண்டு கேங்ஸ்டாருக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை என்பது பற்றி முதல் பாதி சொன்னது. ஆனால் இதன் இரண்டாம் பாதியில் பெரும் சம்பவம் இருக்கு என பார்த்தால் அடிதடி, ரத்தம், குத்து, சண்டை என்றே படம் சென்றது.
இந்த படத்தில் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் வில்லனாக இருந்த போதும் அவர்களின் கேரக்டர்கள் அழுத்தமாக சொல்லப்படவில்லை. இந்த படத்தின் அடுத்த காட்சி என்ன என்பது யூகிக்க முடிந்தது. இதுவே இந்த படத்தின் மைனஸ் ஆக காணப்படுகிறது.
இந்த படத்தை பார்த்தால் ரஜினிகாந்தின் தர்மதுரை படத்தின் கதை ஞாபகம் வருகின்றது. அதன் பின் ட்ராக் மாறி துரோகம், துரோகத்தால் நடக்கும் சம்பவங்கள், அந்த கொலைக்கான காரணத்தை தெளிவாக சொல்ல தனுஷ் தவறிவிட்டார்.
அதை சரியாக சொல்லியிருந்தால் கூட இந்த படம் வெற்றி படமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் வரும் உசுரே நீதான் என்ற ஏ.ஆர் ரகுமானின் பாடல் மிக அருமையாக இருக்கு. தனுஷிற்காக ராயன் பட்டத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.