இதுதான் நான் நடித்ததிலேயே மிகவும் சவாலான காட்சி : கியாரா அத்வானி!

 
1

இதுவரை, தான் நடித்ததிலேயே மிகவும் சவாலான பாடல் காட்சி இதுதான் என்று கியாராஅத்வானி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

‘ஜரகண்டி’ தான் இந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்ட முதல் பாடல். ஒரு பாடலுக்கு 10 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது இந்தப்படத்துக்குத்தான். பிரபுதேவா இதற்கு நடன இயக்குநர். சில கடினமான ஸ்டெப்ஸ்களும் உண்டு. ஒத்திகைக்குப் பிறகே ஆடினோம். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. அவர் ‘ஜரகண்டி’யில் என் நடனத்தைப் பாராட்டினார். இதில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும்.

இயக்குநர் ஷங்கர், கமர்ஷியல் படங்களில் தனித்துவமான அனுபவங்களை உருவாக்குபவர். இதிலும் அப்படித்தான். அவர் பார்வை வித்தியாசமானது. தனது முந்தைய படங்களை விட தற்போதைய படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர். அதற்காகக் கடுமையாக உழைப்பவர். அவருடைய அர்ப்பணிப்பையும் படமாக்கும் அணுகுமுறையையும் கண்டு வியக்கிறேன். இவ்வாறு கியாரா அத்வானி கூறினார்.

From Around the web