வலிமை படத்தில் அஜித் நடிக்கும் கேரக்டரின் பெயர் இதுதான்..!
 

 
வலிமை படத்தில் அஜித்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. 

போனி கபூர் இயக்கத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் முதன்முறையாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. அந்த படத்தில் இயக்குநர் வினோத்துடன் பணியாற்றியது அஜித்துக்கு பிடித்துப் போனது. அதனால் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.

மேலும் இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகளை மீண்டும் போனி கபூரே எடுத்துக் கொண்டார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு முதல் நாள் தொட்டே இருந்து வருகிறது. படத்திற்கான உருவாக்கப் பணிகள் துவங்கி இரண்டாடுகள் முடிந்த போதும், இதுவரை ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை.

முன்னதாக வலிமை போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அது முடியாமல் போனது. மேலும் இதே பிரச்னையால் வலிமை படத்திற்கான மீதி காட்சிகள் படமாக்க முடியாமல் உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்தவரும் பாலிவுட் நடிகையுமான ஹியூமா குரேஷி நடித்து வருகிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர்.

வலிமை படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தில்
அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்று தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் ரசிகர்கள் அஜித்துக்கு மாஸான பெயரை ஹெச். வினோத் வழங்கியுள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.
 

From Around the web