வலிமை படத்தின் புதிய அப்டேட் இதுதான்..!
Sep 2, 2021, 18:34 IST
தமிழக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் வலிமை படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச். வினோத் நடிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இது அஜித்தின் 60-வது படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹியூமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கான பணிகள் வெளிநாட்டில் நடந்து வந்தன. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாதிரி’ பட பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வலிமை படக்குழு மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 - cini express.jpg)