அடடே நியூஸ் இது..! ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி..!  

 
1

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் எந்த சினிமா விழாவில் கலந்து கொண்டாலும் ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி ’நீங்கள் இருவரும் எப்போது இணைந்து நடிக்க போகிறீர்கள்’ என்பது தான். அதற்கு இருவரது பதிலும் சரியான கதையை அமையும் போதும், காலம் வரும்போது நடிப்போம்’ என்றும் கூறியிருந்தனர். 

இந்த நிலையில் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும்  விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா ’கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துள்ள நிலையில் அதில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் கார்த்தி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரசிகர்கள் நாங்கள் நீண்ட வருடமாக எதிர்பார்த்தது நடக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். 

’கங்குவா’ திரைப்படம் ஏற்கனவே சூர்யாவுக்கு திருப்புமுனையை கொடுக்கும் படம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தியும் நடித்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. 

’கங்குவா’ படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆன பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் அந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web