விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா வைத்துள்ள செல்லப் பெயர் இதுதான்..!

 
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

காதலர் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா வைத்துள்ள செல்லப் பெயர் சமூகவலைதளங்கள் மூலம் தெரியவந்ததுள்ளது. இதை நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவுக்கு சமூகவலைதளங்கள் எதிலும் கணக்கு கிடையாது. இருந்தாலும் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமில்லாத ஒரு பக்கத்தில் அவ்வப்போது சில தகவல்களை அவர் வெளியிடுவதுண்டு.

ஆனால் அது அவருடையதா என்பது இதுவரை தெரியவில்லை. எனினும் நயன்தாரா குறித்த சில தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அந்த பக்கத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

nullஅந்த வகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி இப்பாடல் வெளியாகிறது. அந்த பதிவுடன் விக்னேஷ் சிவனை ‘அன்பான இயக்குநர்’ என்று ஹேஷ்டேகிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள் இந்த பதிவை சமூகவலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். காத்துல வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web