நரகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்..!

 
நரகாசூரன் திரைப்படம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள நரகாசூரன் படம் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். அந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் தயாரிப்பில் ‘நராகசூரன்’ படத்தை இயக்கினார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டாலும், கவுதம் மேனன் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இதை கிடப்பில் போட்டுவிட்டு கார்த்திக் நரேன் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியானார்.

அவர் தற்போது தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் ‘டி 43’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நராகசூரன் படம் ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படம் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web