விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் வெளியான குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இது தான்..!
மைத்ரி மூவி மேக்கப் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து உருவாகிய படம் குஷி. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் இணைந்து ரோகிணி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், சச்சின் ஹெடேக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சிவா நிர்வனா இயக்கியுள்ளார்.
இந்த படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டது.
எளிமையான காதல் கதையை மையமாக வைத்து ஃபேமிலி என்டர்டயினர் படமான இந்தப் படம் தற்போது வரை 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
#KUSHI Streaming From OCT 6 in Tel,Tam,Mal,Kan and Hindi On NETFLIX 💥#VijayDeverakonda | #SamanthaRuthPrabhu | #HeshamAbdulWahab | #ShivaNirvana 😎✌️#BlockBusterKushi#KushiOnNetflix#Samantha#VD12#VD13 pic.twitter.com/5f5gIFKCPI
— OTT STREAM UPDATES (@newottupdates) September 13, 2023