பாண்டியன் ஸ்டோரில் 2ல் இருந்து விலக இது தான் காரணம்.. விளக்கம் கொடுத்த வசந்த் வசி..!
Jul 21, 2024, 08:05 IST
பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் இருந்து நடிகர் வசந்த் வசி விலகி விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து அவர் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் "நானும் அந்த வதந்தியை கேள்விப்பட்டேன். ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று சொல்லி இருக்கிறார். அதோடு மேலும் அவர் பேசுகையில் நான் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருக்கிறேன். அந்த சீரியலிலும் இரண்டு மாதங்களுக்கு நீங்கள் நடித்தால் போதும் என்று என்னிடம் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நான் ஏற்கனவே ஜீ தமிழில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன் நான் எப்படி இந்த சீரியலில் ஹெஸ்ட் ரோலில் நடிக்க முடியும் என்று யோசித்தேன். ஏற்கனவே நான் இதற்கு முன்பு நடித்த எல்லாவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெருசாக நடிக்க முடியுமா? என்று முதலில் யோசித்தேன்.
பிறகு அவர்கள் இரண்டு மாதம் மட்டும் நடித்தால் போதும் என்று சொன்னதால் யோசித்தேன் அந்த சீரியலில் கடைசி தம்பி கண்ணன் கேரக்டரை ஹைலைட் பண்ணி காட்டுவதற்காகத்தான் நீங்கள் பிரசாந்த் கேரக்டரில் அந்த சீரியலில் நடிக்கப் போகிறீர்கள் என்று சொல்லி இருந்தார்கள் சரி என்று நானும் நடித்தேன். அந்த நேரத்தில் அந்த கேரக்டர் முடிவது போல தான் இருந்தது. அதனால்தான் நானும் சீரியலை விட்டு வந்து விட்டேன்.
பிறகு அவர்கள் வேறு ஒரு நடிகரை வைத்து அந்த கேரக்டரை கடைசி வரைக்கும் கொண்டு போய் இருக்கிறார்கள். நான் இதுவரைக்கும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஜீ தமிழில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் இனியன் கேரக்டரில் நடித்ததை மறக்க முடியாது. அந்த சீரியல் மூலமாக எனக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தார்கள். இப்ப கூட பலரும் என்னிடம் நீங்க இனியன் கேரக்டரில் நடித்தவர் தானே என்றுதான் என்னை அடையாளப்படுத்தி கேட்கிறார்கள் என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
சமீபத்தில் தான் இவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்தும் எலிமினேஷன் ஆகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமையல் தெரிந்த வசந்த் வசி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கு என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இவர் இரண்டாவது போட்டியாளராக எலிமினேஷன் ஆகி வெளியே வந்தது ரசிகர்களுக்கு அந்த நேரத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கும் நிலையில் அவர் இன்னும் அது உறுதியாக வில்லை என்று கூறியிருக்கிறார்.