எலிமினேஷனுக்கு இதுதான் காரணம் -தர்ஷிகா!

 
1

பிக் பாஸ் பன்அன்லிமிட்டட் ஷோ சமீபகாலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகும் போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து  ஒரு கலகலப்பான கலந்துரையாடல் இடம்பெறும். 

இந்த முறை பிக் பாஸ்-8 வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷிகா மற்றும் சத்தியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிக் பாஸ் அனுபவம் குறித்து சொல்லுமாறு தொகுப்பாளர் சபரி கேட்டதற்கு உடனே சத்தியா "எனக்கு சரியான மனவருத்தம்யா, ஏதோ கரும்பு மெஷின்ல மாட்டுனமாதிரியே இருந்துச்சி" என்று கூறியுள்ளார். அடுத்து தர்ஷிகா "2 முறை கேப்டன் ஆனவங்க எல்லாம் வெளிய வந்துவிட்டோம் ஒரு முறை கூட கேப்டன் ஆகாதவங்க எல்லாம் உள்ள இருக்காங்க" என்று கூறினார்.    

பின்னர் சபரி "4வாரத்துக்கு முன்னாடி இருந்த தர்ஷிகா 4 வாரத்து பிறகு மாறிட்டாங்களா? " என்று கேட்கிறார் அதற்கு தர்ஷிகா "என்னுடைய பீலிங்க்ஸை அங்க காட்டி இருக்கேன் அவ்ளோத்தான்" என்று கூறினார். உடனே சபரி "நான் சுத்தி வளைச்சு கேட்கல உன் எவிட்க்கு காரணம் தர்ஷிகாவா? விஷாலா" என்று கேட்கிறார்.  அதற்கு பதில் சொல்லமுடியாமல் தர்ஷிகா முகத்தினை மறைத்து கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

From Around the web