சினிமாவுக்கு முழுக்கு போடும் உதயநிதி- காரணம் இதுதான்..!

 
உதயநிதி ஸ்டாலின்

முழுநேர அரசியலில் ஈடுபடும் பொருட்டு விரைவில் சினிமாவை விட்டு விலகும் முடிவை உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலே கட்சிப் பணிகளில் தீவிரமாக இயங்க தொடங்கினார். 

தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்வானார். வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

மேலும் திமுக-வுக்கான 10 ஆண்டுகளுக்கான திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் சினிமாவில் அவர் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமாவில் இருந்து அவர் விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சினிமாவில் ஆறு படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி. இவற்றில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படம், உதயநிதி ஸ்டாலினி கடைசிப் படமாக இருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. 

From Around the web