வயசான தோற்றத்தில் நடிகர் சூரி- காரணம் இதுதான்..!

 
சூரி

சினிமாவில் குணச்சித்திர நடிகர் மற்றும் ஹீரோ என இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்து வரும் நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சூரி. 
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் பரோட்டோ காமெடி மூலம் முத்திரை பதித்த சூரி தன்னுடைய பிறந்தநாலை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன.

மேலும் பிறந்தநாளின் வீடியோ பதிவிட்டுள்ள அவர், அதில், வெண்ணிலா கபடிகுழு படத்தில் சூரி பேசும் வசனமான 'எல்லா கோட்டையும் அழிங்க... முதல்ல இருந்து ஆடுவோம்..!' என்று தொடங்கும் அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

From Around the web