இது தான் நடிகை நித்யாமேனன் திருமணத்தை புறக்கணிக்க காரணம் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

 
1

 கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இது அவரை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது….அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்…சிறந்த நடிகை என சொல்லும் விதத்தில் இவர் பயணம் இருக்கின்றது…

அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன.அவருக்கு இவை இரண்டும் மிக பெரிய படமாகும்…குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் தனித்துவமாக இருந்திருப்பார் அவர்…

இந்நிலையில் நித்யா மேனனுக்கு திருமணம் நடக்காதது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்றில்,35 வயதாகிய நித்யாமேனன் திருமணம் செய்துகொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.கேரளாவில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.அதற்கு காரணம் வரதட்சணை கொடுமை அந்தக் கொடுமை தனக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அதேபோல் கதாநாயகிகள் தங்களை மெலிந்த தேகத்தில் வைத்துக்கொள்ள பல முயற்சிகள் செய்வார்கள். ஆனால் நித்யா மேனனோ அப்படி இல்லை அதனால் அவருடைய உடல் எடை அதிகமாக இருக்கிறது. இதனால்கூட திருமணம் செய்ய நினைக்கவில்லை என சர்ச்சைக்குரிய விதமாக பேசி இணையத்தில் திட்டு வாங்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

From Around the web