பிரபல தமிழ் சீரியலில் இருந்து விலகிய வில்லி நடிகை- காரணம் இதுதான்..!

 
செம்பருத்தி சீரியலில் நடந்த மாற்றம்
செம்பருத்தி சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகியதை அடுத்து, வேறொரு பிரபல நடிகை அந்த கதாபாத்திரத்தில் இனி நடிப்பார் என சீரியல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மிகப்பெரிய பார்வையாளர் வட்டத்தை கொண்டது செம்பருத்தி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கங்கா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் ராணி என்பவர் நடித்து வந்தார். இவர் தமிழ் சின்னத்திரை உலகின் பிரபல வில்லி நடிகையாக அறியப்படுகிறார். தற்போது இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

நடிகை ராணி விலகியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முன்னதாக அவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தார். ஒருவேளை மீண்டும் சன் டிவி தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது செம்பருத்தி சீரியலில் ராணிக்கு பதிலாக கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை உஷா எலிசபெத் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கங்கா கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதற்காக அறிவிப்பையும் சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

From Around the web