பெரிய பெரிய படங்கள் தோல்விக்கு இது தான் காரணம் .. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அறிக்கை..

 
1

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் “திரையரங்க வளாகத்திற்குள் யூடியூப்பர்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுப்பது நமது வியாபாரத்தை நாமே சிதைப்பது போன்றதாகும். சிலரின் தவறான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் காரணமாக ஏராளமான படங்கள் தோல்வியடைந்துள்ளன. இது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் கடின உழைப்பிற்கு அவமதிப்பு ஏற்படுத்தும். எனவே, இவ்வகையான செயல்களை கட்டுப்படுத்தவேண்டும்.”என கூறியுள்ளார்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் யூடியூப்பர்களின் செயல்களை ஆதரிக்கின்றனர், மற்றொருபுறம், திரையரங்க உரிமையாளர்கள் அவர்களின் வியாபாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தற்போது இது திரையுலகத்தில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

From Around the web