நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கதறி அழுத மீரா மிதூன்- காரணம் இதுதான்..!!

 
மீரா மிதூன்

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மீரா மிதூன், நீதிபதி முன்பு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தவரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் தலைமறைவான அவரை தனியார் விடுதியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.

மீரா மிதூன் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிடுவதற்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டில் அவருடைய நண்பர் அபிஷேக் சாம் என்பவரையும் போலீஸ் கைது செய்தது. தற்போது இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விடுதி மேலாளரை தாக்க முற்பட்டது உள்ளிட்ட 2 வழக்குகள் மீரா மிதூன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடைய விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அப்போது ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதூன், காவல்துறையினர் தன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிபதி முன்பு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

From Around the web