பிகில் மைக்கேல் ராயப்பனாக மாறிய மயில்சாமி- காரணம் இதுதான்..!

 
மயில்சாமி

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி பிகில் படத்தில் விஜய் ஏற்று நடித்த மைக்கேல் ராயப்பன் கெட்-அப்பை வைத்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. தவிர, அரசியல் களத்திலும் இவர் தீவிரமாக பங்காற்றி வருகிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இதில் விஜய் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அவற்றில் வயதான தோற்றத்தில் அவர் நடித்த மைக்கேல் ராயப்பன் என்கிற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

அச்சு அசலாக அப்படியே பிகில் ராயப்பன் தோற்றத்தில் மயில்சாமி போட்டோஷூட் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதை எதற்காக அவர் செய்தார் என்பது தெரியவில்லை. விரைவில் இதுதொடர்பான தகவலை அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web