ப்ரியா பவானிசங்கரை கொண்டாடும் பவித்ரா லக்ஷ்மி ரசிகர்கள்- காரணம் இதுதான்..!

 
ப்ரியா பவானிசங்கரை கொண்டாடும் பவித்ரா லக்ஷ்மி ரசிகர்கள்- காரணம் இதுதான்..!

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பவித்ரா லக்ஷ்மியை நடிகை ப்ரியா பவானிசங்கர் சமூகவலைதளத்தில் புகழ்ந்துள்ளது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

புதுமுகம் கிஷோர் ராஜ்குமார் இயக்கும் புதிய படத்தில் காமெடி நடிகனாக இருந்து வரும் சதீஷ் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கும் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர் பவித்ரா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ப்ரியா பவானிசங்கர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.


உடனடியாக இதை டேக் செய்து பதிலளித்த நடிகர் சதீஷ், “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாமே போச்சே” என்று ப்ரியா பவானிசங்கர் சிந்திப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ப்ரியா பவானிசங்கர், ”சூப்பரா ஒரு ஹீரோயின் கிடைச்சிட்டாங்க” அவருடைய போஸ்டுக்கு பதிலளித்தார். அதை டேக் செய்த நடிகர் சதிஷ், “ஆனா உனக்கு சூப்பர் ஹீரோ மிஸ் ஆகிட்டாரே” என்று கமெண்ட் செய்தார்.


நடிகை ப்ரியா பவானிசங்கர் மற்றும் நடிகர் சதீஷூக்கு இடையேயான இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், பவித்ரா லக்ஷ்மியை சூப்பர் ஹீரோயின் என ப்ரியா கூறியதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நல்ல என மனசு என்கிற ரீதியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ப்ரியா பவானிசங்கர் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து தற்போது அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதுதவிர, மேலும் சில படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.
 

From Around the web