காரக்குழம்பு கனியை தேடிச்சென்று பாராட்டிய சிம்பு- காரணம் இதுதான்..!

 
காரக்குழம்பு கனியை தேடிச்சென்று பாராட்டிய சிம்பு- காரணம் இதுதான்..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளராக அறிவிக்கப்பட்ட கனி திருவை நடிகர் சிம்பு வீட்டுக்கு தேடிச்சென்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற குக் விதி கோமாளி சீசன் 2 கடந்த வாரத்துடன் நிறைவடைந்தது. இதில் அஸ்வின் ரவிச்சந்திரன், கனி திரு, ஷகீலா, பாபா பாஸ்கர், பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.


ஐந்து சுற்றுகளாக நடந்த இறுதிப் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று கனி திரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் காரக்குழம்பு கனி என்று அடையாளத்தை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற கனியை நடிகர் சிம்பு வீட்டுக்கு சென்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து கனியின் கணவரும் இயக்குநருமான திரு, “சிம்புவின் வருகை இன்பதிர்ச்சியாக இருந்தது. கனி வைத்த காரக்குழும்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web