பேயாக அலைந்து பொதுமக்களை பயமுறுத்தும் விஜய் பட நாயகி- காரணம் இதுதான்..!

 
ஷில்பா ஷெட்டி

அச்சு அசலாக பேய் போல ஒப்பனை செய்து வந்து பொதுமக்களை பயமுறுத்தி அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில், தயாரிப்பு நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டது. அதன்படி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் பிரபல நடிகைக்கு பேய் போல ஒப்பனை செய்து பொது இடத்தில் நிறுத்திவைத்தனர்.

அவரும் பொதுமக்கள் வரும்  போது பயமுறுத்தி நிகழ்ச்சியை பிரபலப்படுத்தினர். இதில் அச்சமடைந்த மக்கள் பலர் நடிகையை திட்டியும் உள்ளனர். ஆனால் பேய் போல நடித்தது பிரபல நடிகை என்று தெரிந்ததும் அசடு வழிந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ரியாலிட்டி நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பேய் போல ஒப்பனை செய்து கொண்டவர் நடிகை ஷில்பா ஷெட்டி தான். தமிழர்களுக்கும் நன்றாக அறிமுகமான இவர், சூப்பர் டான்சர் பார்ட் 4 நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். 

எனவே அதன் ப்ரோமோஷனுக்காக பேய் வேடமிட்டது மட்டுமில்லாமல் பேய் போன்று உடையும் அணிந்து வந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

From Around the web