இதன் காரணமாகவே பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை..!
Dec 5, 2023, 06:05 IST
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டது தொடர்ந்து நேற்று முதல் வீட்டிற்கும் சண்டைகள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வரை வெளியாகவில்லை. சென்னையில் நேற்று இரவு முதல் குட்டை தீர்க்கும் கனமழையால் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
பிக் பாஸ் வீடு அமைக்கப்பட்டுள்ள இடம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து இருக்கலாம் எனவும் அப்படி இல்லை என்றால் புயல் காரணமாக போட்டியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஹோட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது.
 - cini express.jpg)