விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் வனிதா- காரணம் இதுதான்..!

 
வனிதா விஜயகுமார்

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் மோசமான அனுபவம் ஏற்பட்டத்தை அடுத்து விஜய் டிவியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காளி அவதாரத்தில் நடித்தேன். அதற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. இதற்காக பலருக்கும் நன்றி கூறுகிறேன். குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படும் போது அது நான் ஏற்க மாட்டேன். இப்போது விஜய் டிவி என்னுடைய குடும்பமாகிவிட்டது. வேலை செய்யும் இடத்தில் நெறிமுறையற்ற விஷயங்களால் நான் வெளியேறுகிறேன்.

என் தொழில் வளர்ச்சியை பிடிக்காத சிலர் என் மீது வஞ்சம் கொண்டுள்ளனர். அதனால் மோசமாக நடத்தப்பட்டேன். உழைத்து முன்னேறிய ஒரு நபரை, முன்னேற துடிக்கு சிலர் கீழ்மையாக பார்ப்பது வேதனையாக உள்ளது. இது அவமானத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய ஆதரவுமின்றி மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதிக்க முயற்சித்து வருகிறேன். என் வாழ்க்கையை மோசமாக்க பார்க்கின்றனர். 

என்னை மன்னித்து விடுங்கள் சுரேஷ் சக்கரவர்த்தி. என்னால் நீங்களும் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது. நீங்கள் அருமையான கலைஞர், தொழில்முறையாக என்னுடைய முடிவுக்கு நீங்கள் ஆதரவு தந்ததில் எனக்கு மகிழ்ச்சி என வனிதா விஜயகுமார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web