யூ-ட்யூப் புகழ் ப்ளூ சட்டை மாறனின் படத்திற்கு தடை- காரணம் இதுதான்..!

 
யூ-ட்யூப் புகழ் ப்ளூ சட்டை மாறனின் படத்திற்கு தடை- காரணம் இதுதான்..!

சமூகவலைதளங்களில் சினிமா விமர்சகராக அடையாளப்படுத்திக் கொண்டு பிரபலமடைந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆண்டி இந்தியன்’ என்கிற படத்திற்கு தணிக்கைக் குழுவினர் தடை செய்துள்ளனர்.

படங்களை விமர்ச்கிறேன் என்ற பெயரில் திரைப்படங்களை பற்றியும், அதில் பணியாற்றி நடிகர்கள் குறித்தும், படக்குழுவினரை குறித்து சகட்டுமேனிக்கு கருத்து தெரிவித்து சமூகவலைதளங்களி பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

சினிமா படங்களை விமர்சிக்கும் போது எப்போது நீல நிற சட்டை அணிவதால், அவருடைய பெயருக்கு அருகில் ‘ப்ளூ சட்டை’ என்கிற அடைமொழி அமைந்துவிட்டது. தற்போது ‘ஆண்டி இந்தியன்’ என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். 

இந்த படத்தை படக்குழுவினர் தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஆட்சேபக்கூடிய வசனங்கள், காட்சிகள் இருந்ததால் அந்த படத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது தணிகைக் குழு. 

 மதம் சார்ந்த பிரச்னைகள், சமகால அரசியல் மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளியானால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்கிற காரணத்தால் ஆண்டி இந்தியன் படத்தை தணிக்கைக் குழு தடை செய்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தை மறுதணிக்கை குழுவிடம் முறையிட படக்குழு தீர்மானித்துள்ளது. 
 

From Around the web