ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி இது தான்..!  

 
1

கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்களுக்கு கிடைக்காத அமோக வரவேற்பு பெற்று, மிகப் பெரிய சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

2.0, தர்பார் போன்ற படங்களும் எதிர்பார்த்த அளவு விரும்பப்படவில்லை. ‘பேட்ட’ திரைப்படமும், ஜெயிலர் திரைபப்டம் போன்ற வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.  

ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் தகவல்கள் வெளியானது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 375 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது.

375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்ததாக தெரிவித்த அந்த சமூக ஊடகப் பதிவில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஜெயிலர் 2 OTT இயங்குதளங்களில் வெளியிடப்படும் என்பதும், அதில், நெட்ஃபிளிக்ஸில் வெளியாவது உறுதியானது என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஜெயிலரை, செப்டம்பர் 7, 2023 முதல் வீட்டில் இருந்தபடியே அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

From Around the web