கமல் நடிக்கும் தக்லைப் படத்தின் ரன் டைம் இதுதான்!

 
1

விக்ரம் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்த கமல் இந்தியன் 2 மூலம் பின்னடைவை சந்தித்தார். எனவே தன் அடுத்த படமான தக்லைப் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகவுள்ளார் கமல்.

மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவான தக்லைப் திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாகின்றது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்திருக்கிறார். மேலும் த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பலர் இப்படத்தில் நடித்திருக்க ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வெளியான இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியிருக்கிறது.


சில தினங்களுக்கு முன்பு தான் தக்லைப் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து வருகின்ற 24 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகின்றது.

இந்நிலையில் தற்போது தக்லைப் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு இருக்கின்றது. படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு U /A சான்று வழங்கியிருக்கின்றது. மேலும் படத்தின் ரன் டைம் 2 .45 மணி நேரம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த ரன் டைம் சற்று அதிகம் என சிலர் சொன்னாலும் அதற்கு ஏற்ப திரைக்கதை கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும்.


2 .45 மணி நேரத்திற்கு தகுதியான படமாக தக்லைப் இருக்கும் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. இந்நிலையில் கமல் மற்றும் மணிரத்னம் 40 வருடங்கள் கழித்து இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.. மேலும் கமல் மற்றும் சிம்பு முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.சிம்புவின் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு படம் வெளியாகின்றது. கமலின் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து இசையமைக்கிறார் என்பது போன்ற பல காரணங்களால் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web