விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதுதான்- வெளியான ரகசியம்..!

 
விக்ரம் படத்தில் கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோருடன் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல் மிகவும் இளமையாக கடந்த 80களில் இருந்தது போன்ற ஒரு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From Around the web