இந்த சீசனின் விஷ பாட்டில் இவர்தான்- வெளியான பாவ்னியின் குறும்படம்..!

 
பாவ்னி

தாமரைச்செல்வியிடம் இருந்து நாணயத்தை திருடிய விவகாரத்தில் பாவ்னியின் உண்மை முகம் தெரியவந்துள்ளதாக நெட்டிசன்கள் வீடியோவுடன் ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமாரைச்செல்வியிடம் இருந்து ஸ்ருதி மற்றும் பாவ்னி இருவரும் திட்டமிட்டு நாணயத்தை திருடினர். இதனால் பிக்பாஸ் வீடு களேபரமானது.

தாமரைச் செல்வியிடம் சமாதானம் பேசுவது போல பேசி நிலைமையை சமாளித்தார் பாவ்னி. தன் மீது தவறே கிடையாது, நிலைமையை தாமரைச்செல்வி தான் தவறாக புரிந்துகொண்டார் என்று கூறி இருட்டடிப்பு செய்தார்.
ஆனால் நெட்டிசன்கள் சிலர் நாணயம் திருடப்படுவதற்கு முன்னதாக பாவ்னி என்ன பேசினார், நாணயம் திருடுப்பட்ட பிறகு அவர் எப்படி மாற்றிப் பேசுகிறார் என்பதை குறும்படமாக வீடியோ வெளியிட்டு சமூகவலைதளத்தில் ரிலீஸ் செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களை குழப்பிவிடுவதையே வேலையாக வைத்துள்ளார் பாவ்னி. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் நடிகை பாவ்னி மாற்றி மாற்றி பேசும் பேர்வழி என்று சமூகவலைதளங்களில் முத்திரைக் குத்தி வருகின்றனர்.

From Around the web