சூர்யா 40 படத்தின் டைட்டில் இதுதான்- படக்குழு மிரட்டலான அறிவிப்பு..!
 

 
1

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று சூர்யா தன்னுடைய 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படத்திற்கான போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் மிரட்டலாக வெளியாகியுள்ள டைட்டில் வீடியோவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியான போதிலும் தேசியளவிலுள்ள ரசிகர்களிடம் கவனமீர்த்தது. அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் போன்றவை அவ்வப்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலடிக்கும். அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

அதன்படி சூர்யா 40 படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் மிரட்டலான வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
 

From Around the web