ஷாரூக்கான் - அட்லீ - நயன்தாரா பட தலைப்பு இதுதான்..!

 
அட்லீ மற்றும் ஷாரூக்கான்

பாலிவுட்டில் ஷாரூக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கி வரும் படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முழு விபரங்களை பார்க்கலாம்.

தமிழில் பிகில் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் படத்தை இயக்குவதற்கு தயாரானார் அட்லீ. அதற்கான ஆர்மபக்கட்ட பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. அதை தொடர்ந்து கடந்த மாதம் புனேவில் படத்திற்கான தொடக்கப் பணிகள் நடந்தன.

படத்தில் நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் காமெடி காட்சியில் யோகி பாபுவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மிகவும் ரகசியமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சில ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அவ்வப்போது டிரெண்ட் அடித்தன. எனினும் படத்தின் தலைப்பு குறித்த தகவலை படக்குழு யாரும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தனர்.

புனேவில் உள்ள துக்காராம் நகர் மெட்ரோ நிலையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதற்காக படக்குழு அனுமதி கேட்ட கடித தற்போது வெளியாகியுள்ளது. அதில் அட்லீ இயக்கும் ஷாரூக்கான் படத்தின் பெயர் லயன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியில் உருவாகும் படம் என்றாலும், ஷாரூக்கான் உள்ளிட்ட ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் தென்னிந்திய நட்சத்திரங்களாக உள்ளனர். அதனால் அனைவருக்கும் எளிதாக புரியும் நோக்கில் ‘லயன்’ என்கிற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web