விக்ரம் 60 படத்தின் டைட்டில் இதுதான்..!

 
மகான் பட போஸ்டர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வந்த விக்ரம், அதே சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வந்தார். இதை விக்ரம் 60 என்று படக்குழு குறிப்பிட்டு வந்தது. மேலும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார்.

இந்தாண்டின் துவக்கத்தில் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் கொடைக்கானலில் நடந்தது. மேலும் டார்ஜிலிங், நேபாள எல்லை பகுதிகளில் உள்ளிட்டவற்றில் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.


இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி விக்ரம் 60 படத்துக்கு ‘மகான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் நடிகர் விக்ரம் தலையில் கொம்புடன் பல கைகளுடன் புல்லட்டில் சிரித்துக்கொண்டே வருகிறார். இந்த டைட்டில் சமூகவலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
 

From Around the web