அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- அடுத்து நடந்தது இதுதான்..!

 
நடிகர் அஜித் குமார்

கொரோனாவால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமலில் இருக்கும் நிலையில் சென்னையிலுள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சென்னை பாலவாக்கத்தில் வசிக்கிறார். விரைவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் வலிமை படத்தில் பாக்கியுள்ள காட்சிகளுக்காக நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து பேசிய நபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய நபரை கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

From Around the web