விஜய் டிவி செய்திருக்கும் இந்த செயலால்...  ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!  

 
1

தமிழ் சின்னத்திரையில் இரண்டாவது பெரிய சேனலாக இருந்து வருகிறது விஜய் டிவி. ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவி தான் இருக்கிறது.ஒரு சில நேரங்களில் இது முதல் இடத்தில இருக்கும் அப்படி பல முயற்சிகளை எடுத்து டாப் சேனல் வரிசையில் உள்ளது இந்த சேனல் என்றே சொல்லலாம்..

இந்நிலையில் விஜய் டிவி செய்திருக்கும் ஒரு விஷயம் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.பலரும் இதை விமர்சித்து வருகின்றனர் ஈரமான ரோஜாவே சீரியல் 2ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று அந்த சீரியலை டிவியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் செய்வார்களா என யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

அதாவது நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடை அப்படியே மீண்டும் நேற்று ஒளிபரப்பி இருக்கின்றனர் இதனை பார்த்த ரசிகர்கள் அதிகமாக கிண்டல் செய்து வந்துள்ளனர்…இவ்வளவு பெரிய சேனலில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.யார் அந்த எடிட்டர் என பல ட்ரோல் அவர் சந்தித்தார்…

இந்நிலையில் விஜய் டிவி இது பற்றி தற்போது ஒரு வருத்தம் தெரிவித்து இருக்கிறது. நேற்றைய எபிசோடு இன்று ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்…அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது…

1

From Around the web