இதனால தான் மும்பைக்கு குடிபோனாராம் ஜோதிகா - பயில்வான் ரங்கநாதன்..!

சூர்யா, ஜோதிகா இருவருமே, மும்பையில் புது வீடு எடுத்து செட்டிலாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஒருமுறை ஜோதிகா கூறுமபோது, தன்னுடைய அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக குடிப்பெயர்ந்தோம் என்று கூறியிருந்தார்.
பிறகு, சமீபத்தில் சூர்யா அளித்த பேட்டியொன்றில், எங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம். சென்னையைவிட மும்பையில் அதிகப்படியான சர்வதேச பள்ளிகள் இருப்பதால் தான் மும்பைக்கு குடிப்பெயர்ந்தோம் என்றார்..
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், ஜோதிகா ஏன் மும்பைக்கு குறியேறினார் என்று குறித்த விளக்கத்தை மீண்டும் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜோதிகா சொல்லும்போது, "நான் இப்போது சென்னையில் இல்லை.. நான் மும்பைக்கு குடியேறிவிட்டேன். என்னுடைய பிள்ளைகள் அங்கு படிக்கிறார்கள். நான் ஏன் மும்பைக்கு குடியேறிவிட்டேன் என்றால், அங்கு படிப்பதற்கு நிறைய பள்ளிகள் உள்ளன.. பல மொழிகளை கற்கக்கூடிய வசதி, மும்பையிலுள்ள பள்ளிக்கூடங்களில் உள்ளது.. தமிழ்நாட்டில் அந்த வசதி உள்ள பள்ளிக்கூடங்கள் இல்லை.. அதனால்தான் மும்பையில் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். என்னுடைய அப்பா, அம்மாவுக்கு துணை யாரும் கிடையாது. இருவரும் வயதானவர்கள், அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை, மகள் என்ற முறையில் எனக்கு பொறுப்பு உள்ளது. அந்த அடிப்படையில், என்னுடைய பெற்றோரை கவனிப்பதற்காகவும், மும்பையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.
"நான் இனிமேல் ஒரே மாதிரியான படங்களில் நடிக்க போவதில்லை.. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்" என்று சொன்ன ஜோதிகா தினமும் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று, உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். "எப்படி நமது உடலுக்கு சாப்பாடு முக்கியமோ அதுபோல உடற்பயிற்சியும் முக்கியம்.. உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்தான், நம்முடைய உடம்பு கட்டுக்கோப்பாக இருக்கும் என்று சொல்லி உள்ளார் ஜோதிகா" என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.