இதனால் தான் நயன்தாராவை திருமணம் செய்ய முடியவில்லை- விக்னேஷ் சிவன் பளீச்..!

 
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’. ஓடிடி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சமூகவலைதளங்களில் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் இன்ஸ்டாவில் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவுக்கு உங்களுக்கும் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு இடையில் காதல் மலர்ந்தது. தொடர்ந்து ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

From Around the web