இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது... நடுரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த கமல் பட நடிகர்..!  

 
1

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு. இவரின் இளைய மகன் மோகன் (60). இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மோகன் உயரம் குறைவானவர் என்பதால் 1989-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

Kamal

மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்துள்ளார். ஆனாலும் வேறு வேலை எதுவும் கிடைக்காத நிலையில், அவர் அப்பகுதியில் யாசகம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 31) பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது சினிமாவில் துணை நடிகராக நடித்த மோகன் என்பது தெரிய வந்தது.

Mohan

அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மோகன் மரணம் குறித்து மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு 2 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.

From Around the web