இந்த வீடியோ உண்மையில்லை..! வீட்டு வாசலில் வழுக்கி விழுந்தது ரஜினிகாந்த் கிடையாதாம்..! 

 
1

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டு வாசலில் முதியவர் ஒருவர் வழுக்கி விழுந்த வீடியோ வெளியாகி வைரலாகியது.அந்த வீடியோவில் இருக்கும் முதியவர் ரஜினிகாந்த் என்றும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த முதியவரின் வீடியோவை #Rajinikanth என்கிற ஹேஷ்டேகுடன் ஷேர் செய்கிறார்கள்.

வீட்டு தோட்டத்தில் வழுக்கி விழுந்த வேகத்தில் அந்த முதியவர் எழுந்து சென்றதை பார்த்தவர்கள் பதறிவிட்டார்கள். இந்நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் முதியவர் ரஜினிகாந்த் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. யாரோ ஒரு முதியவர் விழுந்ததை ரஜினி தான் என்று சொல்லி குறிப்பிட்ட சிலர் ஷேர் செய்தது தலைவர் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

தலைவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் ராஜா மாதிரி இருக்கிறார். அதனால் முதியவரின் வீடியோவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என ரஜினி ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் இருக்கும் முதியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இந்த வயதில் மனிதர் சும்மா கின்னுனு இருக்கிறார். விழுந்த வேகத்தில் ரப்பர் மாதிரி எழுந்துவிட்டார். அதற்காக அவரை பாராட்ட வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.அமெரிக்காவில் கூலி படம் தன் வசூல் வேட்டையை ஏற்கனவே துவங்கியதை பார்த்து ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேலும் ரஜினி தன் சுயசரிதையை எழுதி வரும் செய்தி அவர்களை இன்னும் சந்தோஷப்பட வைத்திருக்கிறது.
 


 


 

From Around the web