உதயநிதி முதல் உபேந்திரா வரை- தியேட்டருக்கும் வீட்டுக்கும் வரப்போகும் படங்கள்..!!
 

இந்த வாரம் கண்ணை நம்பாதே, கோஸ்டி போன்ற படங்கள் வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. அதேபோல வரும் 17-ம் தேதி வாத்தி மற்றும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
 
movies theatre

கோடைக்காலம் நெருங்கி வருவதால் தமிழ் சினிமா ஆக்ரோஷமாக திரைப்பட வெளியீட்டை மேற்கொள்ள தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

கண்ணை நம்பாதே

kannai nambadhe

இன்று மார்ச் 17ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் முக்கிய வேடத்தில் ஆத்மிகா நடித்துள்ளார். மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சுபிக்‌ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோஸ்டி

ghosti

திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு காஜல் அகர்வால் முழு நீள கதாநாயகியாக நடித்துள்ள படம் கோஸ்டி. கல்யாண் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்க்ஸ்லி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த திகில் படமாக கோஸ்டி தயாராகியுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

கப்ஜா

kabja

கன்னட திரையுலகில் இருந்து கே.ஜி.எஃப், காந்தாராவை தொடர்ந்து அடுத்து வரவுள்ள படம் ’கப்ஜா’. உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரேயா நடித்துள்ள இந்த படமும் இன்று 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இது பான் இந்தியா தயாராகியுள்ளதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது

வாத்தி

vaathi

தனுஷின் புதிய படமான வாத்தி கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த படம், தமிழை விடவும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருந்தார். இப்படம் இன்று மார்ச் 17ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

siva

மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். இந்த படம் எதிர்பார்த்த அளவு திரையரங்கில் வெற்றிப் பெறவில்லை. இதனால் இன்று 17-ம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. ஆனால் இந்த ஓ.டி.டி-யை இந்தியாவில் பார்க்க முடியாது.
 

From Around the web